search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தை ஜி.எஸ்.டி. நிறைவேற்றியுள்ளது-  பிரதமர் மோடி
    X

    பிரதமர் மோடி 

    ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தை ஜி.எஸ்.டி. நிறைவேற்றியுள்ளது- பிரதமர் மோடி

    • வணிகம் செய்வதை ஜி.எஸ்.டி. எளிதாக்குகிறது.
    • சரக்கு மற்றும் சேவை வரி, ஒரு பெரிய வரி சீர்திருத்த முறையாகும்.

    மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரி விதிப்பாக ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி.அமல்படுத்தப்பட்டு, இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    சரக்கு மற்றும் சேவை வரி, ஒரு பெரிய வரி சீர்திருத்த முறையாகும். இது வணிகம் செய்வதை எளிதாக்குகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தை அது நிறைவேற்றியுள்ளது.

    புதிய இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை வரையறுப்பதிலும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×