என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தியேட்டர்கள் மூடப்பட்டதால் சினிமா படங்கள் டி.டி.எச். முறையில் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பப்படுமா? என்று நடிகர் விஷால் ஆலோசனை செய்து வருகிறாராம்.
    தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் சமீபத்தில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் இழப்பை சந்தித்துள்ளன. அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிம்பு, கவுதம் கார்த்திக், ஜெயம் ரவி, ஆதி ஆகியோரின் படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இதனால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    தியேட்டர்களை மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகருமான விஷால் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க தியேட்டர் அதிபர்கள் மறுத்து தியேட்டர்களை மூடிவிட்டனர்.

    இதனால் வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்துள்ள பல தயாரிப்பாளர்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகி வருகிறது. இதுவரை நடந்த பல போராட்டங்களின்போது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தியேட்டர் அதிபர்கள் என சினிமா துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக தியேட்டர் அதிபர்களின் போராட்டத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு அளிக்கவில்லை. அதேபோல் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் கோரிக்கையையும் தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை.



    தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால் சமீபத்தில் வெளியான படங்களையும், திரைக்கு வர தயாராக இருக்கும் படங்களையும் டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் 4 வருடங்களுக்கு முன்பு ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார். படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

    கமலஹாசனின் முயற்சிக்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பினால் படத்தை தியேட்டர்களில் வெளியிடமாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர். இதனால் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பும் முடிவை கைவிட்டார்.

    இந்த நிலையில் தற்போது தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கவும், தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்கவும் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பலாமா? என்று ஆலோசித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் கூறியதாவது:- முதல்-அமைச்சரையும், அமைச்சர்களையும் சந்தித்து சினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கேளிக்கை வரியை அரசு ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களை டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்புவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இதுபோன்ற வரி விதிப்பு சுமைகள் நீடித்தால் தயாரிப்பாளர்களின் நலன் கருதி அடுத்த கட்டமாக அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து முடிவு எடுப்போம். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையில் சினிமா படங்களை டி.டி.எச். மூலம் ஒளிபரப்புவதை தவிர வேறு வழியில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் லாபம் வரும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த திட்டத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.எச். மூலம் படம் பார்ப்பது எப்படி?

    தமிழில் இதுவரை சினிமா படங்கள் டி.டி.எச். மூலம் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால் இந்திப் படங்கள் தியேட்டரில் வெளியானதும் ஒரு வாரத்திலேயே டி.டி.எச். மூலம் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. டி.டி.எச். நிறுவனங்கள் டெலிவி‌ஷனில் அதற்காக தனி சேனல் எண்களை ஒதுக்கியுள்ளன. அந்த சேனல் எண்களில் என்ன படம் எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகும், அதற்கு எவ்வளவு கட்டணம் என்ற அறிவிப்பு வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த கட்டணத்தை ரீசார்ஜ் செய்தாலோ அல்லது அதில் உள்ள அறிவிப்புபடி ரிமோட் கண்ட்ரோலில் பட்டனை அழுத்தினாலோ புதுப்படங்களை டெலிவி‌ஷனில் பார்க்கலாம்.
    மார்க்கெட் இல்லாவிட்டாலும் சிலபேர்களுடன் நடிக்கமாட்டேன் என்று ஒரு நடிகை அடம்பிடிக்கிறாராம்.
    சின்ன குஷ்பு என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நடிகைக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்றெழுத்து படம் சரியாக போகவில்லை என்பதுதான் அந்த நடிகையின் மார்க்கெட் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இருந்தாலும், நடிகைக்கு வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். அவர்களுடன் நடிக்க நடிகை அதிக சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்கவும் முன்வந்தார்களாம். ஆனால்,  அப்படி கீழிறங்கி சென்றால், முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து அவர்களுடன் நடிக்காமல் ஒதுங்கிவிட்டாராம் நடிகை.



    தற்போது நடன நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அந்த நடிகைக்கு இந்த படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என மனதுக்குள் கனவுக் கோட்டை கட்டியுள்ளாராம்.
    ஜி.எஸ்.டி.யிலிருந்து சினிமாவை காப்பாற்றுங்கள் என்று இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    ஜுலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிய நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக விற்கப்படும் டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரியையும் தமிழக அரசு விதித்துள்ளது.

    இதனால் தமிழ் சினிமாவிற்கு 48 முதல் 58 சதவீரம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சினிமா கடுமையாக பாதிக்கப்படும் என கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகின்றனர். இந்நலையில், பிரபல இயக்குனராக ஷங்கர், தமிழ் சினிமாவிற்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார்.



    தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, 48 முதல் 58 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது மிக மிக அதிகம். தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்று பதிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    கபாலி பட நடிகர்களான விஸ்வாந்த், ரித்விகா இருவரும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.
    ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் விஸ்வாந்த், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக மாறியிருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் அந்த படத்தை ஜே.பி.ஆர். என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

    இப்படத்தில் விஷாந்த் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக நடிக்கிறாராம். நாயகி ரித்விகா மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாக நடிக்கிறாராம். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மாறுபட்ட கதைக்களத்தோடு திரில்லரும், எதிர்பாராத திருப்பங்களும் கூடிய கதையாக உருவாகவுள்ளது.



    விஷாந்த், ரித்விகா இரண்டு பேருமே பா.ரஞ்சித்தால் படங்கள் மூலம் பிரபலமானவர்கள். இதுவரை இருவரும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், முதன்முதலாக கதநாயகன், கதாநாயகியாக ஏற்று நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
    மும்பையில் நடந்து ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரஜினியை தவிர்த்து ‘காலா’ படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர். ரஜினி மட்டும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

    இந்நிலையில், காலாவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகிற 10-ந் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் ஜுலை 12-ந் தேதி முதல் ரஜினி கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.



    ‘காலா’ படத்திற்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி. கார்டனில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் ‘காலா’ படப்பிடிப்பு பல நாட்கள் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. ‘காலா’ படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார் ஹுமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 
    விஜய் நடிகர் நாசரின் வீட்டுக்கு சென்று அவரை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
    கடந்த 2014-ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் நடிகர் நாசரின் மகன் பைசல் சிக்கி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், விஜய் சமீபத்தில் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

    அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார். விஜய் தனது மகனை சந்திக்க வந்துள்ளது நாசரை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மகனுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதை தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பில் வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.



    விஜய்யும் நாசரும் இணைந்து ‘பிரியமுடன்’, ‘தமிழன்’, ‘வசீகரா’, ‘சுக்ரன்’, ’ஆதி’, ‘தலைவா’ உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்த கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு நடிகர் விஷால் நன்றி கடிதம் அனுப்பியுள்ளார்.
    நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நாம் அனைவருமே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். பிறந்த இடத்தாலோ வாழும் மாநிலத்தாலே பேசும் மொழியாலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நீர்பாசன ஆண்டான கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதில் ஜுன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜுலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அக்டோபர் 30.17 டிஎம்சி, நவம்பர் 16.05 டிஎம்சி, டிசம்பர் 10.37 டிஎம்சி, ஜனவரி 2.51 டிஎம்சி, பிப்ரவரி 2.17 டிஎம்சி, மார்ச் 2.4 டிஎம்சி, ஏப்ரல் 2.32 டிஎம்சி, மே மாதம் 2.01 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.



    தமிழ்நாடு இப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. விளைவு சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் மடிந்தனர்.

    வழக்கமாக ஜுன் 12-ஆம் தேதி திறந்துவிடப்படும் காவிரி அணை இன்னும் திறக்கப்படவில்லையே.. இந்த ஆண்டும் விவசாயம் செய்ய முடியாதோ என்று வருத்தத்தில் இருந்தனர் விவசாயிகள். கடந்த வியாழன் அன்று இதனை மனதில் கொண்டே கர்நாடகாவில் ஒரு படவிழாவில் பேசினேன். தமிழகத்துக்கு கர்நாடக தண்ணீர் தரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.

    நேற்று நீங்கள் அடுத்த மூன்று மாதங்களில் 94 டிஎம்சி நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் என அறிவித்திருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவது அவசியம் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த அறிவிப்புகளுக்காக நானும் எங்கள் மாநில மக்களும் தங்களுக்கு மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தாங்கள் செய்திருப்பது அரசியலைத் தாண்டிய மனிதாபிமான செயல். எனது வேண்டுகோளை ஏற்று சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட தங்களை நான் தனிப்பட்ட முறையில் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் 1000 சினிமா திரையரங்குகள் மூடப்பட்டன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
    சென்னை: 

    சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.

    இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

    தியேட்டர்களை மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே போராட்டத்துக்கு ஆதரவு தர முடியாது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்தார். திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.

    இருப்பினும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டத்திற்கு பிறகு  அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

    இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தப்படி தமிழகம் முழுவதும் இன்று 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.


    திரையரங்குகள் வேலைநிறுத்தத்தால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு ஏதேனும் உதவுமாறு தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விஷால் வலியுறுத்தினார்.
    சென்னை:

    தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலாகும் சமயத்தில், மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதனையடுத்து, சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்திற்கு பிறகு விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் பேசுகையில், ”கேளிக்கை வரியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இதனால் 10 நாட்கள் பொறுத்து திரையரங்க உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    தற்போது வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளதால், கடந்த வெள்ளிக் கிழமை திரைக்கு வந்த படங்களில் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் 10 தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது உதவிகளை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்ய வேண்டும். நாளை தமிழக அரசு அறிவிக்கும் முடிவினை பொறுட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜி.எஸ்.டி, சினிமாத்துறை பிரச்சனைகள் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ” என்றார்.

    இதனிடையே, ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் நாளை மட்டும் திரையரங்குகள் மூடப்படும் என்று அம்மாநில திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
    10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.
    10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.

    தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா.

    1991-ம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி'' படத்தில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர். தமிழிலும், தெலுங்கிலுமாக 140-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

    திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு `ரோஜா'வாகியிருக்கிறார். அப்பா ஒய்.என். ரெட்டி. அம்மா லலிதா.

    உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள் மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.

    ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்:

    "அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா -தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்.'' சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.

    பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால், நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்:

    "பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு `கட்' அடித்து விட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போதுகூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்ததே இல்லை.''

    இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு `நடிகை அந்தஸ்து' எப்போதுதான் வந்தது?

    "அப்பா, சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினீயராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் `கொத்தடி பொம்மா பூர்ணமா' என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.

    இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி.ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்டபோது அப்பாவின் பார்வை என் மீது. அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம், "நாளை நீ பள்ளிக்குப் போகவேண்டாம்'' என்றார், அப்பா.

    "ஏன்?'' என்று கேட்டேன்.

    "நான் ஒரு டாகுமெண்டரி படம் இயக்குகிறேன் அல்லவா? அதில் உன் வயதுப்பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது?'' என்று கேட்டார் அப்பா.

    "நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?'' என்று திருப்பிக் கேட்டேன்.

    "இதுவும் பாடம் மாதிரிதான். நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்'' என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளவுதான். அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்.''

    இவ்வாறு கூறினார், ரோஜா.

    ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது கல்லூரிப் பருவத்தில்தான். திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் `நடிப்பு' தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்:

    "அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப்பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதை அவர் எங்கள் வீட்டில் சொன்னபோது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், "நடித்தால்தான் என்ன?'' என்று கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.

    அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். நான் "ஒன்றுமில்லை'' என்று கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று, ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகையின் அட்டையில் வர, அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது.

    அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவை கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான். உடனே, "ரோஜா'' என்று பெயர் வைத்துவிட்டார்.

    எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தபோது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தை சொன்னேன். "அடடா! எனக்கு நினைவில்லையே?'' என்று ஆச்சரியப்பட்டார் அவர்.

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    டிரான்ஸ்பார்மர்ஸ் பட வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்திருக்கும் ‘டிராஸ்பார்மர்ஸ் - தி லாஸ்ட் நைட்’ படத்தின் விமர்சனம்
    கடந்த பாகத்தில் பூமியில் ஆட்டோ போட்ஸ் டிரான்ஸ்பார்மர்களின் கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தி வந்த ஆப்டிமைஸ் பிரைம் தன்னுடைய உலகமான சைபர் டிரானுக்கு திரும்புவதோடு படம் முடிந்தது. இந்த பாகத்தில் தன்னுடைய உலகத்தை அடையும் ஆப்டிமைஸ் பிரைம் அது சின்னாபின்னமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறது.

    அப்போது சைபர் டிரானில் குயின்டெஷாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆப்டிமைஸ் உள்ளிட்ட டிரான்ஸ்பார்களுக்கெல்லாம் தான்தான் படைப்பாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது குயின்டெஷா. சைபர் டிரானின் அழிவுக்கு அவள்தான் காரணம் என்று கோபப்பட்டு குயின்டெஷாவை தாக்குகிறது ஆப்டிமைஸ். ஆனால், ஆப்டிமைசை குயின்டெஷா தன் வசப்படுத்துவிடுகிறது.



    சைபர் டிரானின் அழிவுக்கு ஆப்டிமைஸ்தான் காரணம் என்று அதன்மீது குற்றமும் சுமத்துகிறது. குயின்டெஷா தன் வசம் இருந்த படைப்பின் சக்தியான கோலை 12 காவல் தளபதிகள் திருடி பூமியில் மறைத்துவிட்டதாகவும், அதை அவர்கள் ஒரு மனிதனிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறது. அந்த கோல் இருந்தால்தான் சைபர் டிரானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கமுடியும் என்றும், அதை தன்னிடம் வந்து ஒப்படைத்தால் உன்னுடைய தவறை திருத்திக் கொள்ளுமாறும் ஆப்டிமைஸிடம் கூறுகிறது.

    ஆப்டிமைசும் குயின்டெஷாவின் உத்தரவுக்கு செவி சாய்க்கிறது. இதற்குள், பூமியில் குயின்டெஷாவிடமிருந்து திருடிக் கொண்டுவரப்பட்ட கோலின் ஒரு பகுதி நாயகன் மார்க் வால்பர்க்குக்கு கிடைக்கிறது. அதன் சக்தி தெரியாமல் சாதாரணமான ஒரு பொருளாகவே அதை வைத்து இருக்கிறார்.



    அதே நேரத்தில் ஆட்டோ போட்ஸுக்கு எதிரான டிசப்டிகான்ஸ் டிரான்ஸ்பார்மர்ஸ்களின் தலைவனான மெகா ட்ரான், அந்த கோலை எப்படியாவது தங்கள் வசமாக்கி பூமியை அழிக்க திட்டம் தீட்டுகின்றனர். இறுதியில், அந்த கோல் யார் கைவசம் கிடைத்தது? ஆப்டிமைஸ் அந்த கோலை காப்பாற்றி தன்னுடைய உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    மைக்கேல் பே இயக்கியிருக்கும் இந்த பாகத்திலும் இயந்திர டைனோசர்கள் மற்றும் இயந்திர டிராகன்களுடனான சண்டை காட்சிகள் விறுவிறுப்புக்கும், பிரம்மாண்டத்திற்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்திருக்கிறது. இந்த காட்சிகளை 3டியில் பார்க்கும்போது ரொம்பவும் சிறப்பாக இருக்கிறது.



    குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் பம்பிள் பீ கதாநாயகனை காப்பாற்றும் காட்சி பிரமிக்க வைக்கிறது. ஆக்ஷன் மட்டுமில்லாமல் டிரான்ஸ்பார்மர் செய்யும் காமெடிகளும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. அதை தமிழாக்கம் செய்தவிதம் தமிழ்பட ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கிறது.

    இயந்திர மனிதர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ரொம்பவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள். கடந்த பாகத்தைப்போலவே இந்த பாகத்தின் நீளமும் ரசிகர்களுக்கு சற்று சலிப்பை கொடுத்திருக்கிறது. மற்றபடி, ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவை தரும் என்பது உண்மை.

    மொத்தத்தில் ‘டிரான்ஸ்பார்மர்: தி லாஸ்ட் நைட்’ அதிரடி
    மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசும் கேளிக்கை வரியை வசூலிப்பதால் பெரும் இழப்பை சந்திப்பதாக கூறி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு நேற்று புது சட்டம் கொண்டு வந்துள்ளது.

    இதன் காரணமாக, ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி டிக்கெட் பணமாக ரூ.100 வசூலித்தால் அதில் 64 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். மீதம் உள்ள 36 ரூபாயைதான் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள்,

    தயாரிப்பாளர்கள் பங்கிட்டு கொள்ள வேண்டியது இருக்கிறது. கூடுதல் வரியை மக்கள் மீது திணித்தால் தியேட்டருக்கு கூட்டம் வராது என்பதால், கேரள அரசை போல, தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்பு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த அறிவிப்பை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ளார்.

    தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலாகும் சமயத்தில், மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும்.

    இதை தொடர்ந்து முன்பதிவை ஏற்கனவே ரத்து செய்துவிட்டோம். நாளையும், நாளை மறுதினமும் கவுண்டர்களில் ஏற்கனவே உள்ள கட்டணத்தை வசூலிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.

    ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விதிக்கப்படும் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்க்கிறோம். கேரளாவைப் போன்று தமிழக அரசும் இந்த வரியை விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
    ×