என் மலர்
பட அதிபர் மதனுக்கு சொந்தமான சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக ரூ.91 கோடி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா பட அதிபர் மதனை கைது செய்தனர்.
பணத்தை பறிகொடுத்த 133 மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் பட அதிபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மத்திய அரசின் அமலாக்கப்பிரிவும் பட அதிபர் மதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டது.
அமலாக்கப்பிரிவு தற்போது பட அதிபர் மதனுக்கு சொந்தமான ரூ.6.35 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வடபழனி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள சொத்துகள், கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள சுமார் 6 ஏக்கர் நிலம் மற்றும் 2 வீடுகள் முடக்கப்பட்ட சொத்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கும் என்றும், தணிக்கை முறையை எளிமையாக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் திரையுலகினர் ஏற்காமல் பிராந்திய மொழி படங்களுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைசி முயற்சியாக மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களின் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை துறை அதிகாரி மதியழகனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
காலதாமதமின்றி படங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ‘ஏ’ சான்றிதழ் பெறும் படங்கள் மறு தணிக்கை செல்வதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், சிறுபட்ஜெட் படங்களை டி.வி.டியில் பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.
தணிக்கை அதிகாரியை சந்தித்து விட்டு வெளியே வந்த விஷால் நிருபர்களிடம் கூறும்போது, “திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக தமிழ் திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இது சினிமா தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

ரிஷி இயக்கத்தில் அவரே நாயகனாகவும், பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா நாயகிகளாகவும் களமிறங்கும் ‘143’ படத்தின் முன்னோட்டம்.
ஐ டாக்கீஸ் பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் ‘143’.
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்படும் எண் 143. ‘ஐ லவ் யூ’ என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே இது.
இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாத இந்த தலைப்பை கொண்ட படத்தை இயக்குனர் ரிஷி, அவரே கதை எழுதி, இயக்கி நடிக்கிறார்.
நாயகிகளாக பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். இவர்களுடன் சுதா ராஜசிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா உள்பட பலர் நடிக்கிறார்கள். சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவு - ராஜேஷ் ஜே.கே, இசை - விஜய் பாஸ்கர், கலை - மணிமொழியன், ஸ்டண்ட் - தீப்பொறி நித்யா, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு - சதீஷ் சந்திரா பாலேட், கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் - ரிஷி.
“அமாவாசை அன்று பிறந்த நாயகன், பவுர்ணமி அன்று பிறந்த நாயகி. இவர்கள் காதலுக்கு ஒரு வில்லன். இப்படி மூன்று கதா பாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதை ஆக்கம். இது ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் படம். படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார்.

தமிழக அரசின் உள்ளாட்சி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலாகும் சமயத்தில், மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும்.
இதை தொடர்ந்து முன்பதிவை ஏற்கனவே ரத்து செய்துவிட்டோம். நாளையும், நாளை மறுதினமும் கவுண்டர்களில் ஏற்கனவே உள்ள கட்டணத்தை வசூலிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விதிக்கப்படும் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்க்கிறோம். கேரளாவைப் போன்று தமிழக அரசும் இந்த வரியை விலக்கிக் கொள்ளவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
தியேட்டர்களில் ரூ.100-க்கு விற்கப்படும் டிக்கெட், நாளை முதல் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.120-க்கு விற்கப்படும். ரூ.120 டிக்கெட், ரூ.153-க்கு விற்கப்படும் என தெரிகிறது.

பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி அடிபடுகிறது.
நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாக கோலிவுட்டில் வலம்வந்து, இவர்கள் இருவரும் திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோன விஷயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக வந்துள்ள விஷயம் என்னவென்றால், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’ ஆகிய இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.

‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். கல்யாண் இயக்கியுள்ளார். ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். கோபி நயினார் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். இவ்விரண்டு படங்களையும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்படி ஜே.ராஜேஷ் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடித்துவரும் விவேகம் படத்தில் விவேக் ஓபராய் வில்லன் இல்லை என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தையும் அஜித்தை வைத்து இயக்கி வருகிறார் சிவா. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படத்தில் விவேக் ஓபராய்தான் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இதனை மறுத்து படக்குழுவினரும் எந்த செய்தியும் வெளியிடவில்லை. தற்போது முதன்முறையாக இப்படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவில்லை என்று இயக்குனர் சிவா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கவில்லை. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகவும், அக்ஷராஹாசனை சுற்றியே கதை நகரும் என்று சிவா கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், அக்ஷராஹாசன்தான் இப்படத்தின் வில்லனா? என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரத்தில் நிலவுகிறது.

இன்பசேகர் இயக்கத்தில் உமாபதி - ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் விமர்சனம்.
அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார்.
நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். அடுத்தபடியாக நண்பரும் போலீசுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை புகாராக கொடுக்கிறார்.

உடனே அங்கிருந்து கிளம்பும் உமாபதி தான் கொண்டு வந்த கிதாரை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். சிறிது நேரம் கழித்து கிதார் நினைவில்வர, அதை எடுப்பதற்காக மீண்டும் நரேனின் வீட்டுக்கு சென்று கிதாரை தேடிப் பார்க்கிறார். ஆனால், கிதார் அங்கு இல்லை. அந்த கிதாரில் தன்னுடைய முழு விவரமும் இருப்பதால், ஒருவேளை போலீஸ்தான் அதை எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்று பயப்படுகிறார் நாயகன். இதனால் தான் மாட்டிக் கொள்வோம் என்றும் பயப்படுகிறார்.
மறுநாள் தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி, தன்னைக் காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும் என்று நம்பி உதவி கேட்கிறார். இதற்குள், கொள்ளையர்கள் கிதார் மாட்டிக்கொண்டு வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. அதன்பிறகு, தன்னுடைய கிதார் கொள்ளையர்கள் வசம்தான் இருக்கிறது என்பது தெரிந்துகொண்ட நாயகன், எப்படியிருந்தாலும் அந்த கிதார் போலீஸ் வசம் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு கருணகாரனை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்க பார்க்கிறார்.

ஆனால் உண்மையிலேயே பயந்தாங்கொள்ளியான கருணாகரன் இவருடைய பிரச்சினையை எப்படி தீர்த்து வைத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி நடிப்பில் அடுத்தடுத்து உயரத்தை தொடுவார் என்ற நம்பிக்கையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தம்பிராமையாவின் பெயரை இவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது.
நரேனின் மகளாக வரும் கதாநாயகி ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் ஓகேதான். நாயகனுக்கு அப்பாவாக வரும் பாண்டியராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நரேன் நகைச்சுவையான கதாபாத்திரத்தை ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மனோபாலாவுக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கடைசியில், இவரது கதாபாத்திரம் கொடுக்கும் டுவிஸ்டு பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவர் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். படம் முழுவதும் அடிவாங்குவதும், அதை சமாளிப்பது என இவரது கதாபாத்திரம் நகர்ந்து சென்றிருக்கிறது. அதை வித்தியாசப்படுத்தி நடித்து அனைவரையும் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்.
தம்பி ராமையா ஒரு காட்சி வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார். இயக்குனர் இன்பசேகர் ஒரு இன்பமான கதையை உருவாக்கி, அதை ரசிகர்களுக்கு கலகலப்பாக கொடுத்திருக்கிறார். தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். குடும்பத்தோடு சென்றால் கலகலப்பாக பொழுதை கழிக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையிலும் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ கலகலப்பு.

ஜி.எஸ்.டி. வரி காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் சினிமா டிக்கெட் கட்டணம் உயருகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரிக்கு சினிமா தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தநிலையில் ஜி.எஸ்.டி. வரி பற்றி முடிவு எடுப்பதற்காக திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள்.
ஜி.எஸ்.டி. வரி காரணமாக சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம்.
இப்போது ரூ.100-க்கு விற்கப்படும் டிக்கெட், இனிமேல் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.120-க்கு விற்கப்படும். ரூ.120 டிக்கெட், ரூ.153-க்கு விற்கப்படும்.

நாளை முதல் டிக்கெட் முன்பதிவையும் உயர்த்தப்பட்ட விலையிலேயே தொடங்கி இருக்கிறோம். சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசு நிலை என்ன? என்பதை இன்னும் தெளிவாக விளக்கவில்லை.
ஜி.எஸ்.டி. அமலான பிறகு ஒரு வேளை தற்போது நாங்கள் செலுத்தி வரும் 30 சதவீதம் நகராட்சி வரியையும் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறினால், எங்களால் திரையரங்குகளை நடத்த முடியாத நிலை ஏற்படும்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்கள் நகராட்சி வரியை ரத்து செய்துவிட்டு ஜி.எஸ்.டி. மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.
அதே போன்று தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு திரையரங்கு உரிமையாளர்கள் கூறினார்கள்.

தந்தை பெயரை காப்பாற்ற தம்பிராமையா மகன் மாபதி கடுமையாக உழைத்ததாக இயக்குனர் இன்பசேகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தம்பி ராமையா மகன் உமாபதி, ரேஷ்மா நடித்துள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இந்த படத்தின் அனுபவம் பற்றி அதன் இயக்குனர் ர.இன்பசேகரன் கூறுகிறார்...
“வாழ்க்கை எங்கு ஆரம்பித்தது எப்படி போகும். எங்கே போய் நிற்கும் என்பதை யதார்த்தமாக சொல்லும் படம் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’. இந்த படத்தின் நாயகனாக தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்திருக்கிறார். இவர் நடிப்புக்கு புதுசு. என்றாலும், தந்தை பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். எனவே, அதற்காக கடுமையாக உழைத்தார். எந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் அதற்கு முதலிலேயே ஒத்திகை பார்த்து தயாராக இருப்பார். வசனங்களை கூட மனப்பாடமாக வைத்திருப்பார். மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

நாயகி ரேஷ்மா நம்ம வீட்டு தமிழ் பெண் போல அப்படியே பொருந்தினார்.
கேரள மாநிலம் ஆலப்புழையில் நாயகன், நாயகி ஜோடியாக ஒரு படகில் கடலில் தனியாக இருப்பது போன்று ஒரு காட்சி எடுத்தோம். படகை செலுத்தியவர். படகோட்டியின் உதவியாளர். அவரை வைத்து அந்த காட்சியை படமாக்குவதற்குள் போதும்... போதும்... என்று ஆகிவிட்டது. இது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

இயக்குனர் சொன்னதை நம்பி 9 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்ததாக `திமிரு' படத்தில் நடித்திருந்த ஸ்ரேயா ரெட்டி கூறியிருக்கிறார்.
ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அஸ்வமித்ரா இசைஅமைத்திருக்கிறார்.
இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இத்துடன் ஜேஎஸ்கே பிலிம்ஸ் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா வையும் கொண்டாடினார்கள். விழாவில் பேசிய ஸ்ரேயா ரெட்டி...

“ இது 9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம். இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம், நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளியே வந்திருக்காது” என்றார்.
இயக்குனம் ராம், “எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டையும் வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை. அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்” என்று கூறினார்.
விழாவில் தயாரிப்பாளர் சதீஷ்குமார், ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விஷ்ணு - வர்ஷா - இஷாரா நாயர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் விஷ்ணு கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நண்பர்கள் அர்ஜுனன், ராஜ்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பாவான ஜெயப்பிரகாஷும் விஷ்ணுவை ரொம்பவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.
பொறுப்பில்லாமலும், அப்பாவித்தனமாகவும் இருக்கும் விஷ்ணுவை அவரது நண்பர்கள் தங்கள் காதலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக தனது அப்பாவித்தனத்தால் விஷ்ணு தனது நண்பர்களை அவ்வப்போது பிரச்சினையில் மாட்டி விடுகிறார்.

இதனால் கோபமடைந்த அவரது நண்பர்கள் விஷ்ணுவுக்கு காதலே அமையாது என்று அவருக்கு சாபம் விடுகிறார்கள். ஆனால், விஷ்ணுவோ காதலர் தினத்தில் பிறந்த எனக்கு காதல் அமையாதா? நான் யாரையாவது காதலித்து காட்டுகிறேன் என்று அவர்களுக்கு சவால் விட்டு செல்கிறார்.
அப்போது, கல்லூரியில் படிக்கும்போது இவருடன் படித்த இஷா நாயர், இவரை தேடி வந்து காதலை சொன்னது ஞாபகம் வரவே, அவளை தேடிப் போய் தனது காதலை சொல்கிறார். ஆனால், இஷா நாயருக்கோ திருமணம் ஆகி, குழந்தையெல்லாம் இருக்கிறது. உடனே ஏமாற்றத்துடன் திரும்பும் விஷ்ணு சப்-இன்ஸ்பெக்டரான நாயகி வர்ஷாவை பார்க்கிறார்.

அவளை எப்படியாவது காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இறுதியில், வர்ஷாவை காதலிக்க வைத்து, தனது நண்பர்களுக்கு விடுத்த சவாலை விஷ்ணு நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையில் நடித்து வந்த விஷ்ணு, அவ்வப்போது சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாக மாறியிருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
நாயகனின் நண்பர்களாக வரும் அர்ஜுனன், ராஜ்குமார் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகிகளில் இஷாரா நாயர் ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த முகம்தான். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.

டப் மாஷில் புகழ்பெற்ற வர்ஷா ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கும் படம். படத்தில் இவருடைய கதாபாத்திரம்தான் ரொம்பவும் சீரியஸாக செல்லும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு ரொம்பவும் பலம் அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் செய்யும் அமர்க்களம்தான். திருட்டு கும்பலான இவர்கள் செய்யும் சேட்டைகள் படத்தின் கலகலப்புக்கு கியாரண்டி.
இயக்குனர் சுரேஷ்குமார் தனது முதல் படத்தில் காதல் மற்றும் அதற்குள் காமெடி கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி ரொம்பவும் கலகலப்பாக நகர்ந்திருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமாக இதைக் கொடுத்திருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. அதேபோல், பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. பி&ஜியின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ கலகலப்பு.

ஜோடி இல்லாதது தனக்கு வருத்தத்தை அளிக்கவில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி கூறியிருக்கிறார்.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, வரலட்சுமி நடிக்கும் படம் ‘விக்ரம் வேதா’. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூறும்போது...
“விக்ரமாதித்தன் - வேதாளம் கதையை கருவாக்கி இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் மாதவன் போலீசாகவும், விஜய்சேதுபதி தாதாவாகவும் நடித்து இருக்கிறார்கள். மாதவன் தாடி வைத்த கெட்அப்பில் வருகிறார்” என்றார்கள்.

மாதவனுடன் நடித்தது பற்றி பேசிய விஜய்சேதுபதி, “இந்த படத்தில் மாதவனுடன் நடித்தது நல்ல அனுபவம். சீனியர் நடிகர் என்று முதலில் பயந்தேன். ஆனால் அவர் உற்சாகம் அளித்தார். வரலட்சுமி எப்போதும் படபடவென்று பேசுவார். இந்த படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. அதற்காக வருத்தப்படவில்லை” என்று கூறினார்.
படம் பற்றி கூறிய மாதவன், “இறுதிசுற்று படத்துக்கு பிறகு தமிழில் இதில் நடித்திருக்கிறேன். முதல் முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிக்கும்போது எங்களிடம் எந்த ‘ஈகோ’வும் இல்லை. சில விஷயங்களில் அவரிடம் இருந்து நிறைய கற்றிருக்கிறேன். அவர் ரசிகர்களை சந்தித்து வருவது நல்ல விஷயம். இது உறவை பற்றிய படம்” என்றார்.