என் மலர்
நீங்கள் தேடியது "Film producer"
- சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு.
- சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.
இவர், அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக பிரபல நிறுவனத்தில் ரூ.1.70 கோடி கடன் பெற்ற நிலையில், திரும்ப அளிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- சுரேஷ், நதியா நடிப்பில் 'பூக்களை பறிக்காதீர்கள்', விஜயகாந்த், நதியா நடித்த 'பூ மழை பொழியுது' படங்களை தயாரித்துள்ளார்.
- நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்', விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஸ்ரீ ராஜகாளியம்மன் முவீஸில் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தயாரித்த படங்கள்,
சுரேஷ், நதியா நடிப்பில் 'பூக்களை பறிக்காதீர்கள்', விஜயகாந்த், நதியா நடித்த 'பூ மழை பொழியுது', சுரேஷ், நதியா நடித்த 'இனிய உறவு பூத்தது', பிரபு, ரூபிணி நடித்த 'என் தங்கச்சி படிச்சவ', பிரபு, கௌதமி நடித்த 'பிள்ளைக்காக', அர்ஜுன், ரூபினி நடித்த 'எங்க அண்ணன் வரட்டும்', சத்யராஜ், கௌதமி நடித்த 'வேலை கிடைச்சிருச்சு' , அம்பரீஷ், மாலா ஸ்ரீ நடித்த 'ரவுடி எம்எல்ஏ' (கன்னடம்),
பிரபு, குஷ்பூ நடித்த 'கிழக்குக்கரை', அருண் பாண்டியன், சுகன்யா நடித்த 'கோட்டைவாசல்', சரத்குமார், கனகா நடித்த 'சாமுண்டி', பிரபு, குஷ்பூ நடித்த 'மறவன்', விஜயகாந்த், வினிதா நடித்த 'பதவி பிரமாணம்', ரவிச்சந்திரன், ரம்யா கிருஷ்ணன் நடித்த 'சினேகா' (கன்னடம்) ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் மோகன் நடராஜனுக்கு நடிகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மோகன் நடராஜன் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






