search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயகுமார்"

    • வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.
    • வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

    இவர், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கு இன்று 11-வது முறையாக விசாரணைக்கு வந்தது.

    விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா இன்று ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது வக்கீல் ஆஜரானார்.

    இந்த நிலையில் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி பூரணஜெயா ஆனந்த் உத்தரவிட்டார்.

    • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
    • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

    அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

    அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

    ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

    காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

    சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

    பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×