search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vanitha"

  • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
  • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை:

  நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

  அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

  அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

  ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

  காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

  நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

  வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

  சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

  இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

  பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
  • இதனிடையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.

  தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.


  நயன்தாரா - விக்னேஷ் சிவன்

  தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


  அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

  இதைத்தொடர்ந்து, நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்" என பதிவிட்டிருந்தார்.


  கஸ்தூரி பதிவு

  இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்கி - நயன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை அழிப்பவர்கள் தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும் டுவீட் போடறதும். திருந்தவேமாட்டங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்" என்று பகிர்ந்துள்ளார்.

  இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை மறைமுகமாக தாக்குகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.


  நடிகை வனிதா விஜயகுமார் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.
  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில மாதங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 

  வனிதா

  இவர் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வனிதா, தற்போது புதிதாக தொழில் தொடங்கி உள்ளார். பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கடையை அவர் புதிதாக திறந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
  விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டுக்குள் வனிதா நுழைந்த விவகாரத்தில், கருத்து தெரிவித்த விஜயகுமார், தப்பு செய்தவர்கள் பலனை அனுபவிப்பார்கள் என்றார். #Vanitha #Vijayakumar
  நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக சென்னை ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. இதை அவர் படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.

  சில நாட்களுக்கு முன் அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்த மகள் வனிதா அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்தார். இதுபற்றி விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறை அந்த வீட்டை விட்டு வெளியேற்றியது.

  வனிதா தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.  நேற்று வனிதா திரும்பவும் ஆலப்பாக்கம் பங்களாவுக்குள் நுழைந்தார். உடனே போலீசார் அவரை வெளியேற்றினார்கள். இதனால் வனிதா முதல்-அமைச்சரை சந்திக்க முயன்று திரும்பினார். இதுபற்றி விஜயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

  ‘‘தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க. நான் வேற என்ன சொல்றது? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே இதைப் பத்தி பேட்டியெல்லாம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லைங்க’’ இவ்வாறு வருத்தமாகச் சொன்னார். வனிதாவிடம் அவர் தரப்பு கருத்தைக் கேட்பதற்காக முயற்சி செய்தபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் நிலையிலேயே இருந்தது. #Vanitha #Vijayakumar

  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இன்று காலை விஜயகுமார் வீட்டிற்குள் தனது மகள் உடன் நடிகை வனிதா சென்றுள்ளார். #vanitha #vijayakumar

  சென்னை:

  ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 19-வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டை விஜயகுமார் சினிமா ஷூட்டிங் எடுக்க வாடகைக்கு கொடுத்து வந்தார்.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இயக்கும் டாடி என்கிற சினிமா படப்பிடிப்பிற்காக இரண்டு நாட்கள் வீட்டை வாடகைக்கு எடுத்த விஜயகுமார் மகள் வனிதா வீட்டை திரும்ப ஒப்படைக்காமல் வீட்டை விட்டு வெளியேறாமல் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

  பின்னர் மதுரவாயல் போலீஸ் மூலம் வனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்த வனிதா ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வனிதா பூந்தமல்லி நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் இன்று காலை தனது வழக்கறிஞர்கள் உடன் விஜயகுமார் வீட்டிற்குள் தனது மகள் உடன் நுழைந்த நடிகை வனிதா பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு என் அம்மா பெயரில் உள்ள இந்த வீட்டை விட்டு நான் போலீசாரால் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். நான் நடித்து சம்பாதிக்கும் போது வாங்கிய வீடு.

  இதில் நான் உள்பட என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்கும் இந்த வீட்டில் பங்கு உண்டு. நான் நியாயம் கேட்டு உச்சநீதி மன்றம் சென்று ரிட் மனு தாக்கல் செய்தேன்.

  அங்கு எனக்கு பாத்தியப்பட்ட இந்த வீட்டில் இருப்பதற்கு யாரும் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்றும் தேவைப்பட்டால் காவல் துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த உத்தரவு நகல்களை காவல் துறை தலைவர் கமி‌ஷனர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளேன்.

  இவ்வாறு கூறினார். #vanitha #vijayakumar

  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நடிகை வனிதா மனுதாக்கல் செய்த நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Vanitha #VijayaKumar #ArunVijay
  நடிகர் விஜய்குமாருக்கு சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் சொந்தமாக பங்களா ஒன்று உள்ளது. விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன் அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினார்.

  வனிதா விஜயகுமாரின் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர். விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. இவர்களுக்கு நடிகர் அருண் விஜய் உள்பட 3 வாரிசுகள். வனிதாவின் தாயார் மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என 3 மகள்கள். பிரீதா இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவி ஆந்திராவில் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

  வனிதா படப்பிடிப்புக்கு பிறகும் அந்த வீட்டை காலி செய்யாததால் விஜயகுமார் மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார். போலீசார் தலையிட்டு, நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர்.  அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். வனிதாவும் தனது தாயார் மறைவிற்கு பிறகு அவருக்கு சொந்தமான சொத்துக்களை விஜயகுமாரும், அவரது முதல் மனைவி மற்றும் மகன் அருண்விஜய் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் தெரிவித்து இருந்தார்.

  இதனை நடிகர் விஜயகுமார், நடிகர் அருண் விஜய் ஆகியோர் மறுத்தனர். இந்தநிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார்.

  அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. #Vanitha #VijayaKumar #ArunVijay


  வீட்டை அபகரித்ததாக மகள் மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்த நிலையில், நடிகை வனிதா அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #VijayaKumar #Vanitha
  பிரபல நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா வீடு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்ட லட்சுமி நகர் 19-வது தெருவில் உள்ளது. இதனை அவர் படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்டு வந்தார்.

  இவரது மூத்த மகள் நடிகை வனிதா புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இதற்காக படப்பிடிப்பு நடத்த அவர் கடந்த வாரம் தந்தை விஜயகுமாரிடம் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

  படப்பிடிப்பு முடிந்தும் வனிதா அந்த வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார். மேலும் வீட்டில் தனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

  இதனால் விஜயகுமாருக்கும், மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார் மதுரவாயல் போலீசில் வனிதா மீது புகார் அளித்தார்.

  நேற்று மாலை சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனையும் சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது வீடு தொடர்பான சொத்து ஆவணங்களையும் கொடுத்தார்.

  இது தொடர்பாக உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். வனிதாவிடம் வீடு தொடர்பான ஆவணங்களை கொடுக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லை.  இதையடுத்து நேற்று இரவு போலீசார் அதிரடியாக சர்ச்சைக்குரிய பங்கா வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த நடிகை வனிதாவை போலீசார் வலுக் கட்டாயமாக வெளியேற்றினர்.

  மேலும் வீட்டில் அத்துமீறி தங்கியிருந்த கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், ஆண்ட்ரூஸ், வடபழனியை சேர்ந்த ஜோசப் மனோஜ், திருவேங்காடு பாலா, சைதாப்பேட்டை சத்திய சீலன், நெற்குன்றம் தியாகராஜன், காஞ்சீபுரம் மணிவர்மா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

  அனைவரையும் வெளியேற்றிய பின்னர் பங்களா வீட்டை போலீசார் பூட்டு போட்டு பூட்டினர். அதன் சாவியை நடிகர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

  வனிதா மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  நடிகர் விஜயகுமார் - மகள் வனிதாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #VijayaKumar #Vanitha

  மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வீட்டை காலி செய்ய மறுப்பதாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். #Vijayakumar #Vanitha
  நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் ஏராளமான அறைகள் உள்ளன. சினிமா படப்பிடிப்புக்காக இந்த பங்களா வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

  இந்த வீட்டை, விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகள் வனிதாவுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். படப்பிடிப்பு ஒன்றுக்காக வனிதா இந்த வீட்டை தந்தையிடம் கேட்டுப் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

  இதனையடுத்து விஜயகுமார், வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக வனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் வீட்டில் எனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

  இதையடுத்து அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யுங்கள் என்று வனிதாவிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

  இதற்கிடையே நடிகை வனிதா, ஆலப்பாக்கம் வீட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் மோதலில் ஈடுபட்டார். அவதூறாகவும் பேசினார்.

  நடிகை வனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் தனது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  ×