search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஃபைனலி பிரசாந்தின் `அந்தகன் திரைக்கு வரவுள்ளது
    X

    ஃபைனலி பிரசாந்தின் `அந்தகன்' திரைக்கு வரவுள்ளது

    • நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் சில ஆண்டுகளாகவே எந்த அப்டேட்டுகளும் இல்லாமல் இருந்தது. வெறும் பண்டிகை நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். பலப்பேர் இப்படம் வெளியாகாது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் கைவிடப்பட்டது எனவும் செய்திகள் பரவி வந்தது.

    இதெற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். இப்படம் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×