search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனிதா"

    • நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
    • இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    கோல்டன் ஈகிள் ஸ்டூடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கியுள்ள புதிய திரைப்படம் "தில் ராஜா." இந்தப் படத்தில், விஜய் சத்யா, ஷெரீன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை வனிதா பேசும் போது, "விஜய் சத்யாவிற்கும், ஏ வெங்கடேஷ் சாருக்கும், அம்ரீஷுக்கும் என் வாழ்த்துக்கள். அம்ரீஷை அதிகம் வெளியில் பார்த்ததில்லை, இப்போது தான் பார்க்கிறேன். எல்லாப் பாடல்களும் நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள்."

    "10 ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் சண்டை நடந்த போது, மீண்டும் சினிமாவில் நடிக்க நினைத்தேன். அப்போது, ஏ வெங்கடேஷ் சார் தான் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் நடிக்க என்னைத் தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள்."

    "ஏ வெங்கடேஷ் சார் கேட்ட போது, சார் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், என்றைக்கு என்று சொல்லுங்கள் நான் வருகிறேன் என போய் நடித்தேன். இப்போது நானும் இயக்குநராக மாறியிருக்கிறேன், ஒரு பெரிய படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன்."

    "எனக்கு படம் செய்வதில் உள்ள கஷ்டம் தெரியும். விஜய் சத்யா இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் வருகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்றார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் சில ஆண்டுகளாகவே எந்த அப்டேட்டுகளும் இல்லாமல் இருந்தது. வெறும் பண்டிகை நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். பலப்பேர் இப்படம் வெளியாகாது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் கைவிடப்பட்டது எனவும் செய்திகள் பரவி வந்தது.

    இதெற்கெல்லாம் முற்றுப் புள்ளி  வைக்கும் வகையில் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். இப்படம் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
    • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

    அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

    அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

    ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

    காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

    சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

    பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
    • இதனிடையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


    அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து, நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்" என பதிவிட்டிருந்தார்.


    கஸ்தூரி பதிவு

    இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்கி - நயன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை அழிப்பவர்கள் தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும் டுவீட் போடறதும். திருந்தவேமாட்டங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்" என்று பகிர்ந்துள்ளார்.

    இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை மறைமுகமாக தாக்குகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.


    ×