பெரிய படத்தில் உதவி இயக்குநரான நடிகை வனிதா

நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
பெரிய படத்தில் உதவி இயக்குநரான நடிகை வனிதா
Published on

கோல்டன் ஈகிள் ஸ்டூடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கியுள்ள புதிய திரைப்படம் "தில் ராஜா." இந்தப் படத்தில், விஜய் சத்யா, ஷெரீன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை வனிதா பேசும் போது, "விஜய் சத்யாவிற்கும், ஏ வெங்கடேஷ் சாருக்கும், அம்ரீஷுக்கும் என் வாழ்த்துக்கள். அம்ரீஷை அதிகம் வெளியில் பார்த்ததில்லை, இப்போது தான் பார்க்கிறேன். எல்லாப் பாடல்களும் நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள்."

"10 ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் சண்டை நடந்த போது, மீண்டும் சினிமாவில் நடிக்க நினைத்தேன். அப்போது, ஏ வெங்கடேஷ் சார் தான் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் நடிக்க என்னைத் தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள்."

"ஏ வெங்கடேஷ் சார் கேட்ட போது, சார் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், என்றைக்கு என்று சொல்லுங்கள் நான் வருகிறேன் என போய் நடித்தேன். இப்போது நானும் இயக்குநராக மாறியிருக்கிறேன், ஒரு பெரிய படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன்."

"எனக்கு படம் செய்வதில் உள்ள கஷ்டம் தெரியும். விஜய் சத்யா இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் வருகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்றார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com