"எலெக்ஷன்" படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

எலெக்‌ஷன் படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த மாதம் வெளியானது.மன்னவன் பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"எலெக்ஷன்" படத்தின் 2வது சிங்கிள் வெளியானது
Published on

'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'எலெக்ஷன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார்.

'அயோதி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், எலெக்ஷன் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

மன்னவன் என்று துவங்கும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com