search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்.ஜி. eZS
    X
    எம்.ஜி. eZS

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரம்

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் வாகனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் இரண்டாவது வாகனமான eZS எலெக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    ஏற்கனவே வெளியான தகவல்களில் எம்.ஜி. மோட்டார் தனது eZS எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் எம்.ஜி. மோட்டார் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை பல கட்டங்களில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

    எம்.ஜி. eZS

    புதிய எம்.ஜி. eZS கார் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு மற்றும் ஆமதாபாத் என ஐந்து நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் வெளியீட்டுக்கு eZS முன் தேவையான சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கென எம்.ஜி. மோட்டார் ஃபின்லாந்து நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முதல் 52 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஏற்படுத்த இருக்கிறது. அந்த வகையில் எம்.ஜி. eZS எலெக்ட்ரிக் கார் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய எம்.ஜி. eZS எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எம்.ஜி. மோட்டார் தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    Next Story
    ×