என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஜாவா லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்
Byமாலை மலர்11 Oct 2019 8:06 AM GMT (Updated: 11 Oct 2019 8:07 AM GMT)
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் லிமிட்டெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆண்டு விழா சிறப்பு எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஜாவா லிமிட்டெட் எடிஷன் மாடல் 90 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜாவா லிமிட்டெட் எடிஷன் மாடல் விலை ரூ. 1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் வெறும் 90 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிறப்பு டீக்கல்கள், மேம்பட்ட லிவெரி மற்றும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.
ஜாவா ஆண்டு விழா லிமிட்டெட் எடிஷன் ரெட் மற்றும் ஐவரி நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பெட்ரோல் டேன்க்கில் பின் ஸ்ட்ரிப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் காண்டிராஸ்ட் குரோம் எக்சாஸ்ட் பைப் மற்றும் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர பெட்ரோல் டேன்க்கில் பிரத்யேக எண் அச்சிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளில் 293 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 26 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜாவா மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்தவர்களும் லிமிட்டெட் எடிஷன் மாடலை தேர்வு செய்து கொள்ள முடியும். எனினும், இதற்கு அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
Next Story
×