என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்
Byமாலை மலர்10 Sep 2019 2:22 PM GMT (Updated: 10 Sep 2019 2:22 PM GMT)
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய 2019 டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 53,437 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் வைட் / பிளாக் என டூயல் டோன் நிறத்தில் கிடைக்கிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட அழகாக காட்சியளிக்கிறது. புதிய நிறம் தவிர ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் இடம்பெற்றிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் AHO (ஆட்டோ ஹெட்லைட் ஆன்), ஹனிகாம்ப் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட சைடு பேனல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர், அலுமினியம் கிராப் ரெயில்கள், பிளாக் நிற அலாய் வீல்கள், அழகிய டெயில் லைட்கள் இடம்பெற்றிருக்கின்றன.
டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலிலும் முந்தைய வெர்ஷனை போன்று 110 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரேக்கிங்கிற்கு 110 எம்.எம். டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் அதிக உறுதித்தன்மை கொண்ட பட்டன் ரக டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Next Story
×