என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் சுசுகி அக்சஸ் 125 புதிய வேரியண்ட் அறிமுகம்
Byமாலை மலர்14 Aug 2019 9:07 AM GMT (Updated: 14 Aug 2019 9:07 AM GMT)
சுசுகி நிறுவனம் இந்தியாவில் அக்சஸ் 125 ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இந்தியாவில் அக்சஸ் 125 ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய சுசுகி அக்சஸ் 125 டிரம் பிரேக் வேரியண்ட் தற்சமயம் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய சுசுகி அக்சஸ் விலை ரூ. 59,891 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 61,590 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரம் பிரேக் வேரியண்ட்டில் அலாய் வீல் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. சுசுகி அக்சஸ் 125 டிரம் பிரேக் கொண்ட அலாய் வீல் மாடல்: பியல் டீப் புளு, கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக், மெட்டாலிக் மேட் ஃபைப்ரொயின் கிரே மற்றும் பியல் மிரேஜ் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
புதிய சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழஹ்கப்பட்டுள்ளது. இது 8.7 பி.ஹெ்.பி. @7000 ஆர்.பி.எம். மற்றும் 10.2 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் புதிய சுசுகி அக்சஸ் 125 மாடலில் ஈசி-ஸ்டார்ட் சிஸ்டம், பெரிய ஃபூட் போர்டு, பெரிய சீட், அழகிய ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் மீட்டர், ஆயில் சேன்ஜ் இன்டிகேட்டர், டூயல் ட்ரிப் மீட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
Next Story
×