search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பெரிய என்ஜினுடன் அடுத்த தலைமுறை ஹோன்டா ஆப்பிரிக்கா
    X

    பெரிய என்ஜினுடன் அடுத்த தலைமுறை ஹோன்டா ஆப்பிரிக்கா

    ஹோன்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆப்பிரிக்கா மோட்டார் சைக்கிள் பெரிய என்ஜினுடன் உருவாகி வருகிறது. #Honda #HonaAfrica
    ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற மோட்டார் சைக்கிளை உருவாக்குவதில் தனித்துவமாய் திகழும் ஜப்பானின் ஹோன்டா நிறுவனம் தனது ஹோன்டா ஆப்பிரிக்கா மாடல் மோட்டார் சைக்கிளில் அடுத்த தலைமுறை மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது முந்தைய மாடலை விட பெரிய என்ஜினைக் கொண்டிருக்கிறது. 

    சாகசப் பிரியர்கள் பெரிதும் விரும்பும் இந்தமாடல் முதன் முதலில் 1988-ம் ஆண்டு எக்ஸ்.ஆர்.வி. 650 என்ற பெயரில் அறிமுகமானது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டில் எக்ஸ்.ஆர்.வி. 750 மாடல் அறிமுகமானது. தற்போது அறிமுகமாகியுள்ள ஆப்பிரிக்கா ட்வின் மாடல் மோட்டார் சைக்கிள் 2016-ம் ஆண்டில் அறிமுகமானது. 

    அனேகமாக இதில் பெரிய அளவிலான மாற்றங்கள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என ஹோன்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள சி.ஆர்.எப்.1000 எல் மாடல் ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் என்ஜின் சற்று பெரியதாகும். இது ஐரோப்பிய எமிஷனான பி.எஸ். 5-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 1,080 சி.சி. திறன் கொண்டிருக்கிறது. இரட்டை என்ஜினுடன் 94 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,000 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 20 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இதன் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் இதன் விலை ரூ.13.23 லட்சம் முதல் துவங்குகிறது. இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ.13.55 லட்சம் என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×