என் மலர்

  ஆட்டோமொபைல்

  2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம்
  X

  2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2019 டாமினர் மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியது. #Dominar2019 #Motorcycle  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. அந்த வதையில் புதிய டாமினர் 2019 மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய ரூ.5000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  கடந்த சில மாதங்களில் டாமினர் 2019 மாடல் சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிள் விளம்பரமும் வெளியிடப்பட்டது.

  புதிய 2019 மோட்டார்சைக்கிளின் முக்கிய அம்சங்களாக அப்சைடு-டவுன் ஃபோர்க் இருக்கிறது. கே.டி.எம். டியூக் 390 மாடலிலும் இதேபோன்ற ஃபோர்க் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய டாமினரில் இந்த அம்சத்துடன் பல்வேறு இதர அம்சங்களும் சேர்க்கப்படுகிறது.  அந்த வகையில் 2019 டாமினர் மாடலில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டிஸ்க் பிரேக் பொசிஷன் மற்றும் டபுள்-பேரெல் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய டாமினர் சத்தம் வித்தியாசமானதாக இருக்கும். 

  2019 பஜாஜ் டாமினர் மாடலின் என்ஜின் பி.எஸ்.-VI எமிஷன்களுக்கு உகந்ததாக இருக்கும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடல் முந்தைய டாமினரை விட சதக்திவாய்ந்ததாக இருக்கும். தற்போதைய டாமினர் மாடலில் 373சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

  இந்த என்ஜின் 34.5 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்க் செயல்திறன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. 
  Next Story
  ×