search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    யமஹா பேசினோ
    X
    யமஹா பேசினோ

    சோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்

    யமஹா நிறுவனத்தின் பேசினோ பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    யமஹா நிறுவனத்தின் வாகனங்கள் ஒவ்வொன்றாக பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. புதிய புகை விதிகள் அமலாகும் முன் யமஹாவின் பேசினோ ஸ்கூட்டர் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு அப்டேட் செய்யப்படுகின்றன.

    அந்த வகையில் பேசினோ பி.எஸ். 6 இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் பேசினோ பி.எஸ். 6 ஸ்கூட்டர் மேம்பட்ட வடிவமைப்பு, புதிய என்ஜின் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி புதிய ஸ்கூட்டரில் தற்போதைய மாடலில் உள்ளதை விட பெரிய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கையின் கீழ் அதிக இட வசதியை எதிர்பார்க்கலாம். தற்சமயம் விற்பனை செய்யப்படும் பேசினோ பி.எஸ். 6 மாடலில் 21 லிட்டர் இட வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    யமஹா பேசினோ ஸ்பை படம்

    பி.எஸ். 6 பேசினோ ஸ்கூட்டரில் புதிய அலாய் வீல்கள், முன்புறம் 12 இன்ச் மற்றும் பின்புறம் 10 இன்ச் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லர் கேப், கூர்மையான டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

    தற்சமயம் விற்பனையாகும் யமஹா பேசினோ ஸ்கூட்டரில் 113சிசி சிங்கில் சிலி்ண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.2 பி.ஹெச்.பி. பவர், 8.2 என்.எம். டார்க் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே செயல்திறன் வழங்கும் என்ஜின் புதிய ஸ்கூட்டரிலும் எதிர்பார்க்கலாம்.

    புகைப்படம் நன்றி: Zigwheels
    Next Story
    ×