search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா நெக்சான்
    X
    டாடா நெக்சான்

    முதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து தனது வாகனங்களை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் நெக்சான் எஸ்.யு.வி. 2017 ஆம் ஆண்டு அறஇமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்திய சந்தையில் எஸ்.யு.வி. பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது.

    கடந்த சில மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மற்றும் ஹூன்டாய் வென்யூ போன்ற மாடல்களின் வரவு காரணமாக டாடா நெக்சான் விற்பனையில் சரிவு ஏற்பட துவங்கியுள்ளது. தற்சமயம் இந்தியாவுக்கான நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் முதல்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ஸ்பை படங்களின் படி நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. எனினும், காரின் முன்புறம் ஹெட்லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட ஏர் இன்டேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் ப்ரோஜெக்டர் லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா நெக்சான்

    புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் டாடாவின் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஹேரியர் மாடலில் அறிமுகமான இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி புதிய நெக்சான் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இருக்கைகளில், டேஷ்போர்டு மற்றும் கேபின் உள்ளிட்டவற்றில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதுதவிர நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் கடும் கிராஷ் சோதனைகளை எதிர்கொள்ளும் என தெரிகிறது. புதிய பாதகாப்பு விதிகள் அக்டோபர் 2020 முதல் இந்தியாவில் அமலாக இருப்பதால், இவற்றை புதிய காரில் வழங்க டாடா முடிவு செய்திருக்கலாம்.

    புகைப்படம் நன்றி: Gaadiwaadi
    Next Story
    ×