என் மலர்
- விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷியா உதவி செய்து வருகிறது என அதிபர் விளாடிமிர் புதின் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர்," கூடங்குளத்தில் 6 அணு உலைகளில் 3 ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.
இந்தியாவிற்கு எண்ணெய், நிலக்கரி, எரிவாயு வழங்கும் நம்பிக்கையான நாடு ரஷியா" என்றார்.
- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
- திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.
திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
* தமிழ்நாட்டில் மதநல்லிணக்க சூழலை சீர் குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்கிறது.
* நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
* 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
* ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றச் சொல்கிறார்கள்.
* திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.
* இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜிஜூ மிரட்டுகிறார்.
* பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பொய் பிரசாரம் செய்கிறார்.
* மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம்.
* திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.
* நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் அடிக்க வேண்டும்.
- நியூசிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.
கிறைஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்னும் எடுத்தன. 64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்திருந்தது.
3-வது நாளான நேற்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், டிவான் கான்வே தொடர்ந்து பேட் செய்தனர். கான்வே 37 ரன்னில் ஒஜாய் ஷீல்டு பந்து வீச்சில் 'கேட்ச்' ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வீழ்ந்தார்.
இதைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டாம் லாதமுடன் இணைந்தார். வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்த இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து அசத்தினர். தனது 14-வது சதத்தை அடித்த டாம் லாதம் 145 ரன்களிலும், 4-வது சதத்தை எட்டிய ரச்சின் ரவீந்திரா 176 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 95 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. வில் யங் 21 ரன்னுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 109 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 466 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 531 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 531 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் சீரான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜான் கம்பெல் 15 ரன்களிலும், டேகனரின் சந்தர்பால் 6 ரன்களிலும், அவர்களை தொடர்ந்து வந்த அலிக் அதானேஸ் 5 ரன்களிலும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
72 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை ஷாய் ஹோப் - ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் ஜஸ்டின் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் 4-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் அடித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஹோப் 116 ரன்களுடனும், ஜஸ்டின் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் நியூசிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
- இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.
- ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
- கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.
இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.







