என் மலர்
- ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
- கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.
இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.
- 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இதில் மார்னஸ் லபுஷேன் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 25-வது டெஸ்ட் அரை சதம் ஆகும். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை மார்னஸ் லபுஷேன் படைத்துள்ளார். அவர் 45 ரன்கள் எடுத்த போது இந்த வரலாற்றை படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக ஸ்மித் 827 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக வார்னர் (753), ஹெட் (752), ரூட் (639) ஆகியோர் உள்ளனர்.
- விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நாடு முழுவதும் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளன.
விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை என நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தில் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமான சேவை பாதிப்புக்கு நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கத்தை பதிவாக வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நரகத்திற்கு போ இண்டிகோ! இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விமான நிலையங்களில் பயணிகள் பல நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர், ஆனால் உங்கள் செயலி விமானங்கள் ஏறும் நேரத்தில் ரத்து செய்யும் வரை "சரியான நேரத்தில்" இருப்பதைக் காட்டுகிறது. இது ஒரு தொழில்நுட்ப கோளாறு அல்ல - இது அலட்சியம்.
புதிய DGCA விதிகள் நடைமுறையில் இருப்பதால், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக உங்கள் அட்டவணையை நீங்கள் சரிசெய்திருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய குழப்பம் அபத்தமானது. என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள், உங்களால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு பேசினார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கி விட்டனர். இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையனால் புத்துயிர் ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
உலகத் தலைவர்களுடன் நான் உரையாடும் போதெல்லாம், விரிவான கலந்துரையாடல்களில், இந்தியா நடுநிலையானது அல்ல என்று நான் எப்போதும் கூறுவேன். இந்தியாவுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, அந்தப் பக்கம் அமைதி. அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம், அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். இடையே உலகத் தலைவர்களிடம் வலியுறுத்துகிறோம்.
கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. மிக விரைவில், உலகம் கவலைகளிலிருந்து விடுபட்டு, உலக சமூகத்திற்கு சரியான திசையில் ஒரு புதிய நம்பிக்கை எழும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்தார்.
- சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.
முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
இந்நிலையில் அவரை ஜெயில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- சென்னையில் இன்று 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட இருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (டிச.5) மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







