தொழில்நுட்பம்
ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை ஒத்திவைப்பு - காரணம் இதுதான்

Published On 2021-09-11 05:12 GMT   |   Update On 2021-09-11 05:12 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனை அந்த தேதியில் துவங்குகிறது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை விநாயகர் சதுர்த்தி தினத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை துவங்கவில்லை. தற்போது கூகுள் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல்களை சோதனை செய்து வருகின்றன. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தீபாவளி சமயத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 



சர்வதேச சந்தையில் செமிகண்டக்டர் குறைபாடு காரணமாக ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தாமதமாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் ஹெச்.டி. பிளஸ் 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர் வழங்கப்படுகிறது.

இத்துடன் டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, 13 எம்பி ஆம்னிவிஷன் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News