தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கை எமோஜி

Published On 2019-03-20 09:13 GMT   |   Update On 2019-03-20 09:13 GMT
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் எமோஜி சேர்க்கப்படுகிறது. #WhatsApp



வாட்ஸ்அப் செயலியில் போட்டோக்களை டூடுள் செய்யும் போது எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை தேட வழி செய்யும் அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.

இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற பாலினத்தவரை குறிக்கும் எமோஜிகளும் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் திருநங்கைகளை குறிக்கும் எமோஜி வழங்கப்பட இருப்பது பற்றி ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும் இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் எமோஜிபீடியா வலைதளத்தின் உதவியுடன் திருநங்கை எமோஜியை சாட்களில் மறைக்கும் வசதியை சேர்த்திருக்கிறது.



இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருநங்கை எமோஜி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.73 வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை கொண்டு தேட வழி செய்யும் சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சமும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச் பை இமேஜ் அம்சம் கொண்டு பயனர்கள் அனுப்பிய அல்லது அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானது தானா என கண்டறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இவைதவிர, வாட்ஸ்அப் செயலியில் ஆடியோக்களை அனுப்பும் முன் அவற்றை கேட்கச் செய்யும் வசதியும் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒரேசமயத்தில் அதிகபட்சம் 30 ஆடியோ ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. 
Tags:    

Similar News