தொழில்நுட்பம்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒன்பிளஸ் 6டி இணையத்தில் லீக் ஆனது

Published On 2018-09-05 05:29 GMT   |   Update On 2018-09-05 05:29 GMT
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் ரீடெயில் பெட்டி புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் தெரியவந்துள்ளது. #OnePlus6T



ரஷ்யாவின் சான்று அளிக்கும் வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

புதிய தகவல்களின் படி முன்பக்கம் வாட்டர் டிராப் வடிவிலான நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதேபோன்ற அம்சங்கள் ஒப்போ ஆர்17 / ஆர்17 ப்ரோ மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



அட்டைப்பெட்டியின் பக்கவாட்டு மற்றும் உள்புறங்களில் "Unlock The Speed" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பிரான்டிங் மற்றும் "6" எண் வெளிப்புறம் அச்சிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 256 ஜிபி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒப்போ ஆர்17 போன்று பின்புறம் டூயல் கேமராக்களை வழங்குமா அல்லது ஆர்17 ப்ரோ மாடலை போன்று மூன்று கேமரா வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

ஒன்பிளஸ் 6 மாடல் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், ஒன்பிளஸ் 6டி மாடலில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News