புதிய கேஜெட்டுகள்

கோப்புப்படம்

கிளாம்ஷெல் டிசைனில் Foldable ஐபோன் உருவாக்கும் ஆப்பிள் - லீக் ஆன புது தகவல்

Published On 2024-05-06 11:36 GMT   |   Update On 2024-05-06 11:36 GMT
  • அளவில் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
  • சுவாரஸ்யமான ஹிஞ்ச் டிசைனை உருவாக்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி வருவது தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. மடிக்கக்கூடிய ஐபோன் தொடர்பாக இதுவரை ஏராளமான புகைப்படங்கள், ரெண்டர்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பாக ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

சமீபத்தில் வெளியான தகவல்களிலும், ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும், இதற்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இது அளவில் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமை சார்ந்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் கிளாம்ஷெல் டிசைன் கொண்ட புதிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமை விவரங்கள் மே 2 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

காப்புரிமைகளின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய சாதனத்தில் சுவாரஸ்யமான ஹிஞ்ச் டிசைனை உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. புதிய டிசைனின் படி புதுவித ஹிஞ்ச் காரணமாக இந்த சாதனம் தற்போது விற்பனை செய்யப்படும் மடிக்கக்கூடிய சாதனங்களை விட தடிமனாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனம் மடிக்ககூடிய ஐபோன் மட்டுமின்றி மடிக்க்கூடிய ஐபேட் மாடலையும் உருவாக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. 

Tags:    

Similar News