புதிய கேஜெட்டுகள்

50MP கேமரா, Curved டிஸ்ப்ளே.. அடுத்த வாரம் இந்தியா வரும் புது மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2024-05-08 12:04 GMT   |   Update On 2024-05-08 12:04 GMT
  • எட்ஜ் 50 அல்ட்ரா, எட்ஜ் 50 ப்ரோ மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்.
  • இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஐரோப்பாவில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 50 ப்ரோ மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 


இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் மோட்டோரோலா இந்தியா அதிகாகரப்பூர்வ சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுதவிர ப்ளிப்கார்ட் தளத்திலும் டீசர்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் பாரஸ்ட் புளூ, ஹாட் பின்க் மற்றும் மார்ஷ்மல்லோ புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹெல்லோ யு.ஐ. வழங்கப்படுகிறது.

இத்துடன் 6.7 இன்ச் கர்வ்டு pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம், இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. 

Tags:    

Similar News