தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். புதிய அறிவிப்பு

Published On 2018-08-05 05:20 GMT   |   Update On 2018-08-05 05:20 GMT
ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL #offers


பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் இலவச எஸ்.எம்.எஸ். வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போஸ்ட்பெயிட் சலுகைகளில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதிக விலையில் கிடைக்கும் சலுகைகளுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் ரூ.399 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சலுகைகளில் குறிப்பிட்ட வேலிடிட்டிக்கு மொத்தம் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

புதிய அறிவிப்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது. பி.எஸ்.என்.எல் பிரீமியம் சலுகைகளிலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படாமல் இருந்தது.

பி.எஸ்.என்.எல் நிறுவன போஸ்ட்பெயிட் சேவைகள் தற்சமயம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய மாற்றங்கள் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அமலாகியிருக்கிறது. அந்த வகையில் இதேபோன்ற அறிவிப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஜூன் மாதத்தில் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளிலும் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகள் மற்றும் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளில் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. #BSNL #offers
Tags:    

Similar News