தொழில்நுட்பம்
கோப்பு படம்

இன்ஸ்டா ஸ்டோரீஸ் இப்படியும் ஷேர் செய்யலாம்

Published On 2018-05-18 06:37 GMT   |   Update On 2018-05-18 06:37 GMT
இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

புதிய அப்டேட் மூலம் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். இனி ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தெரியும். 



இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் பிரத்யேக பேக்கிரவுன்டுடன் ஷேர் செய்ய தயார் நிலையில் இருக்கும். இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம். இன்ஸ்டாகிராம் ஃபீட்களில் இருந்து ஷேர் செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும்.

நீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News