தொழில்நுட்பம்
ரூ.6000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் விலை ரூ.6,000 வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:
சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 32 ஜிபி விலை ரூ.35,900 மற்றும் 128 ஜிபி விலை ரூ.37,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய விலையில் இருந்து இது ரூ.6,000 வரை குறைவு ஆகும்.
சாம்சங் அறிவித்திருக்கும் புதிய தள்ளுபடி ஆஃப்லைன் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கூடுதலாக பே.டி.எம். சார்பில் ரூ.5,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் பெற வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும்.
ஆகஸ்டு 2016-இல் இந்தியாவில் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 32 ஜிபி விலை ரூ.50,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் 128 ஜிபி விலை ரூ.56,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. பின் இதன் விலை முறையே ரூ.41,900 மற்றும் ரூ.43,900 விலையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.
தள்ளுபடி அறிவிக்கப்படும் முன் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் விலை ஆஃப்லைனில் முறையே ரூ.38,900 மற்றும் ரூ.40,900 என நிர்ணம் செய்யப்பட்டிருந்தது. சாம்சங் இந்தியா ஆன்லைன் தளத்தில் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 128 ஜிபி விலை ரூ.43,900 என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சில தினங்களில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 2016 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.