உலகம்
பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா

பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா

Published On 2022-05-02 02:14 GMT   |   Update On 2022-05-02 02:14 GMT
பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அதிக பணவீக்கம், சரியும் அந்நிய செலாவணி கையிருப்பு போன்ற பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.61 ஆயிரத்து 218 கோடி) நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பாகிஸ்தானுக்கான எண்ணெய் நிதியை 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2.4 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க பாகிஸ்தான் முன்மொழிந்ததாகவும், அதை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News