உலகம்
அமெரிக்காவில் ஒமைக்ரான் துணை வைரஸ் ஆதிக்கம்

அமெரிக்காவில் ஒமைக்ரான் துணை வைரஸ் ஆதிக்கம்

Published On 2022-03-31 03:12 GMT   |   Update On 2022-03-31 03:12 GMT
கடந்த 26-ந் தேதியுடன் முடிந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன் :

அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது.

ஒமைக்ரானை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1 வைரசை விட 30 சதவீதம் அதிகமாக பரவும்.

கடந்த 26-ந் தேதியுடன் முடிந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பாக இது 39 சதவீதமாக இருந்தது. அதற்கு 2 வாரங்களுக்கு முன்பு 27.8 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News