உலகம்
ஈக்வடாரில் நிலச்சரிவு

ஈக்வடாரில் கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

Published On 2022-02-02 08:15 GMT   |   Update On 2022-02-02 10:23 GMT
குயிட்டோவில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் என பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கி சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளதாக குயிட்டோவின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 8 வீடுகள், கார் உள்ளிட்ட வாகனங்கள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.



இந்த பேரழிவில் சிக்கிய சுமார் 48 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 12 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

மேலும், அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்.. பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்- பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
Tags:    

Similar News