உலகம்
விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

ஒமைக்ரான் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை - விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

Update: 2021-12-04 23:16 GMT
இவ்வளவு சீக்கிரம் ஒமைக்ரான் வகை பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.
ஜெனிவா: 

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஒமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகிறது. நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும். 

உலகளவில் 99 சதவீத நோய்த்தொற்றுக்கு டெல்டா வகை காரணம். இந்த உருமாறிய வைரசும் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் தற்போது கணிக்க முடியாது. நாம் காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News