search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுமியா சுவாமிநாதன்"

    • தரமணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
    • இதில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றார்.

    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவருமான

    சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:

    அறிவியல் வளர்ச்சி உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஒரு ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடிந்தது.

    கொரோனா தொற்று அடியோடு ஒழிந்து விட்டதாக கருதமுடியாது. மொத்தம், 27 வகை வைரஸ்கள் உள்ளதால் எந்த வகை வைரஸ் தாக்கும் என கணிக்க முடியாது. இனிமேல் மனிதர்கள் கூடவே வைரஸ் இருக்கும்.

    தடுப்பூசி போட்டதாலும், இயற்கை சூழல் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததால், கொரோ தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

    குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தற்போது பரவும் காய்ச்சல் குறித்து தீவிர பரிசோதனை தேவை. காற்றில் பரவும் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது அவசியம்.

    எந்த வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×