என் மலர்

  உலகம்

  அதிபர் ஜோ பைடன், அதிபர் புதின்
  X
  அதிபர் ஜோ பைடன், அதிபர் புதின்

  வரும் 7ம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் அதிபர் ஜோ பைடன் கலந்துரையாடல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க தயாரான நிலையில் அதிபர் புதினுடன் நீண்ட விவாதம் நடத்த உள்ளேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
  வாஷிங்டன்:

  ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின், விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.

  கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

  இதற்கிடையே, உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் ரஷ்யா நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில், வரும் 7ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சியில் கலந்துரையாட உள்ளார். அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்காமல் தடுக்க, புதினுடன் நீண்ட விவாதம் ஒன்றை நடத்த உள்ளேன் என்றார்.

  Next Story
  ×