செய்திகள்
காத்திருக்கும் மக்கள்

காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

Published On 2021-08-26 23:50 GMT   |   Update On 2021-08-26 23:50 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இதில் பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதலில் 13 பேர் இறந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது.  குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் காரோஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News