செய்திகள்
மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன - இங்கிலாந்து அரசு அறிவிப்பு

Published On 2021-07-19 01:32 GMT   |   Update On 2021-07-19 01:32 GMT
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
லண்டன்:

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகள் வந்த பிறகு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக இங்கிலாந்து அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இரவு நேர கிளப்கள், உள் அரங்கு கூட்டங்கள் ஆகியவை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிதல் மற்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதற்கான சட்ட ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் சுணக்கம் காட்டக்கூடாது என்றார். 
Tags:    

Similar News