செய்திகள்
கொரோனா வைரஸ்

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்தது

Published On 2021-06-03 20:51 GMT   |   Update On 2021-06-03 20:51 GMT
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பெர்லின்:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
  
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது. அவர்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 10-வது இடத்தில் உள்ளது
 
இந்நிலையில், ஜெர்மனியில் ஒரே நாளில் 2,991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜெர்மனியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News