செய்திகள்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நோயாளி

ஸ்பெயினில் 36 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Published On 2021-05-15 19:13 GMT   |   Update On 2021-05-15 19:13 GMT
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மாட்ரிட்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ஸ்பெயின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 333-ஐக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32.97 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் 2.28 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News