செய்திகள்
கோவேக்சின் தடுப்பூசி

617 உருமாறிய கொரோனா வைரஸ்களை அழிக்கும் இந்திய தடுப்பூசி

Published On 2021-04-28 04:22 GMT   |   Update On 2021-04-28 14:26 GMT
இந்தியாவில் தற்போது நாம் காணும் உண்மையான நிலை, கடும் சிரமமாக இருந்தபோதிலும், தடுப்பூசி போடுவதே தீர்வாக இருக்கும் என அமெரிக்க மருத்துவ வல்லுநர் கூறி உள்ளார்.
வாஷிங்டன்:

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் (மரபணு மாற்றம்) அடைந்து வெவ்வேறு வடிவங்களில் பரவி மனித உயிர்களை பலி வாங்கி வருகின்றன. 

இந்த வைரஸ் மற்றும் அவற்றை அழிக்கும் மருந்துகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வகையில், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியானது, 617 உருமாறிய கொரோனா வைரஸ்களை அழித்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தொற்று நோய் குறித்து நாம் தினசரி தரவுகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம். அவ்வகையில், இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசியால் குணமடைந்த நோயாளிகள் மற்றும் அந்த தடுப்பூசி பெற்றவர்களின் தரவுகளை ஆய்வு செய்தோம். இதில், கோவேக்சின் தடுப்பூசி 617 உருமாறிய வைரஸ்களை அழித்தது கண்டறியப்பட்டது. எனவே, இந்தியாவில் தற்போது நாம் காணும் உண்மையான நிலை, கடும் சிரமமாக இருந்தபோதிலும், தடுப்பூசி போடுவதே தீர்வாக இருக்கும்’ என்றார்.
Tags:    

Similar News