செய்திகள்
இந்திய வம்சாவளி எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவுக்கு தடுப்பூசி அனுப்புங்கள்... பைடன் நிர்வாகத்திடம் இந்திய வம்சாவளி எம்பி வேண்டுகோள்

Published On 2021-04-25 05:26 GMT   |   Update On 2021-04-25 05:26 GMT
கொரோனாவை கட்டுப்படுத்தி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தை பாதுகாக்க, தடுப்பூசிகளை அனுப்ப வேண்டியது அவசியம் என்று ராஜா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 3.5 லட்சத்தை நெருங்கிவிட்டது. 26 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவத்துறை திணறி வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவுக்கு அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி மருந்துகளை அனுப்பும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இந்திய வம்சாவளி எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



‘அமெரிக்காவில் தற்போது 40 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பயன்படுத்தப்படாமல்  உள்ள அந்த மருந்துகளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்’ என அவர் கூறி உள்ளார்.

சர்வதேச அளவில் பரவும் வைரசை கட்டுப்படுத்தவும், மக்களின் ஆரோக்கியம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தை பாதுகாக்கவும் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டியது அவசியம் என்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News