செய்திகள்
கொரோனா பரிசோதனை

பிரான்சை துரத்தும் கொரோனா - 50 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

Published On 2021-04-11 18:22 GMT   |   Update On 2021-04-11 18:22 GMT
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98,602 ஆக உயர்ந்துள்ளது.
பாரிஸ்:

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50,23,785 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 98,602 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3.03 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 46.21 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News