செய்திகள்
கோப்புப்படம்

மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை - வங்காளதேச அரசு உறுதி

Published On 2021-03-21 21:09 GMT   |   Update On 2021-03-21 21:09 GMT
நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வருகிற 26-ந் தேதி வங்காளதேசம் செல்கிறார்.
டாக்கா:

வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நாள் மற்றும் நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்கள் அங்கு கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த 17-ந் தேதி தொடங்கிய இந்த விழா வருகிற 27-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.‌ இதையொட்டி இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வருகிற 26-ந் தேதி வங்காளதேசம் செல்கிறார்.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என வங்காளதேச அரசு உறுதியளித்துள்ளது.

அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஏகே அப்துல் மோமன் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து கூறியதாவது:-

பிரதமர் மோடியை வங்காளதேசத்துக்கு அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அவரின் பயணத்துக்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை. சில இடதுசாரி மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் அவரது வருகையை எதிர்க்கின்றன. அவர்கள் அதை செய்யட்டும். அவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. மோடி உள்பட விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து வெளிநாட்டு விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News