செய்திகள்
கொரோனா வைரஸ்

அமீரகத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3½ லட்சத்தை கடந்தது

Published On 2021-02-20 03:49 GMT   |   Update On 2021-02-20 03:49 GMT
அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 20 பேர் பலியானார்கள். மேலும் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3½ லட்சத்தை கடந்தது.
அபுதாபி:

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 69 ஆயிரத்து 526 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண் ணிக்கை 3 லட்சத்து 65 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 349 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 51 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் அதிகப்பட்சமாக 20 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,093 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அமீரகத்தில் 12 ஆயிரத்து 209 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News