செய்திகள்
ஆண்டனியோ குட்டரெஸ்

அமைதிப்படைக்கு பரிசாக 2 லட்சம் தடுப்பூசி : இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி

Published On 2021-02-18 23:25 GMT   |   Update On 2021-02-18 23:25 GMT
ஐ.நா. அமைதிப்படைக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கியதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகிற ஐ.நா. அமைதிப்படையினரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கும்” என்று அறிவித்தார்.

இதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், “இந்தியாவின் இந்த பரிசுக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்த தடுப்பூசியை வினியோகிக்கும் திட்டத்தை ஐ.நா. ஆதரவு துறை மேற்கொள்ளும்” என தெரிவித்தார்.

ஐ.நா. அமைதிப்படையில், அமைதி ஏற்படுத்தும் 12 நடவடிக்கைகளில் 94 ஆயிரத்து 484 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News