இலங்கையில் சுகாதாரத் துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுகாதார மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
பதிவு: ஜனவரி 24, 2021 02:29
கொரோனா வைரஸ்
கொழும்பு:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையையும் விட்டுவைக்கவில்லை.
இலங்கையில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு 56 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றால் 278 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கை நாட்டின் சுகாதாரத் துறை மந்திரியாக உள்ள பவித்ரா வன்னியராச்சிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை சுகாதார மந்திரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அங்குள்ள அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி பவித்ரா வன்னியராச்சி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 2-வது மந்திரியும், 5-வது எம்.பி.யுமாவார்.
Related Tags :