செய்திகள்
ஜகர்தா தொழிலதிபர்

கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒட்டுமொத்த விமானத்தை புக் செய்த கோடீசுவரர்

Published On 2021-01-09 22:46 GMT   |   Update On 2021-01-09 22:46 GMT
கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீஸ்வரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்தார்.
ஜகர்தா:

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

கொரோனா பாதிப்புகளால் பல நாடுகள் தங்கள் விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. 

இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீசுவரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் ஜகர்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலி நகரத்துக்கு தன் மனைவியுடன் செல்ல திட்டமிட்டார். ஆனால் பிற பயணிகளுடன் பயணித்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளார். இதற்காக அவர்  ரூ. 6 லட்சம் இந்தோனேசியப் பணம் செலவழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தான் தனது மனைவியுடன் அந்த விமானத்தில் பயணித்தது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர், கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக எனது மனைவியுடன் செல்ல முழு விமானத்தையும் முன்பதிவு செய்ததோம், தங்களை தவிர வேறு  யாரும் அந்த விமானத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம் இந்த விமானத்தை முன்பதிவு செய்தபோது பிரைவேட் ஜெட்டை விட மலிவானது என்பதை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News