செய்திகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப்

இந்திய வரலாற்றில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி - அமெரிக்கா புகழாரம்

Published On 2020-08-31 23:04 GMT   |   Update On 2020-08-31 23:04 GMT
இந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அந்த பரிசோதனையில் மூளையில் ரத்த 
கட்டி இருப்பதும், கொரோனா வைரஸ் தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மூளையில் உள்ள ரத்த கட்டியை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் கோமா நிலைக்கு சென்றார். இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரணாப் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேம். 

இந்திய வாரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவரின் இழப்பால் வருந்தியுள்ள இந்திய மக்களுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News