செய்திகள்
சீனா, அமெரிக்கா

இந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு

Published On 2020-06-02 12:42 GMT   |   Update On 2020-06-02 12:42 GMT
இந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்று அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் எலியெட் ஏங்கள் குற்றம் சாட்டி உள்ளார்.

வாஷிங்டன்:

இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இரு நாடுகளும் தங்களது படைகளை குவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் எலியெட் ஏங்கள் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பால் நான் கவலைப்படுகிறேன். சர்வதே சட்டத்தின்படி மோதல்களை தீர்ப்பதற்கு பதிலாக அண்டை நாடுகளை கொடுமைப்படுத்த சீனா தயாராகி இருப்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். இந்தியாவுடனான எல்லை பிரச்சினைகளை தீர்க்க சீனா மதிக்க வேண்டும். தூதரக மற்றும் நடை முறையில் உள்ள வழி முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று நான் கடுமையாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News