செய்திகள்
கோப்பு படம்

பாகிஸ்தானில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2020-05-13 06:17 GMT   |   Update On 2020-05-13 06:17 GMT
பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிலையான சமூக மேம்பாட்டு அமைப்பு (எஸ்.எஸ்.டி.ஓ.) என்ற அரசு சாரா அமைப்பு ‘பாகிஸ்தானில் மனிதர்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்தல்’ என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எஸ்.எஸ்.டி.ஓ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜனவரி மாதத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒரு வழக்கு கூட பதிவாகாத நிலையில், மார்ச் மாதத்தில் 61 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதே போல் ஜனவரியில் 9 கற்பழிப்பு வழக்குள் பதிவான நிலையில், மார்ச் மாதத்தில் அது 25 வழக்குகளாக அதிகரித்தது. பெண்களுக்கு எதிரான பிற வன்முறை சம்பவங்களும் ஜனவரியில் 10 ஆகவும், மார்ச் மாதத்தில் 36 ஆகவும் உயர்ந்தன. அதேபோல் குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், சிறுவர்களை கொத்தடிமைகளாக நடத்துதல் போன்ற குற்றங்களும் அதிக அளவில் அதிகரித்துள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News