செய்திகள்
கொரோனா வைரஸ்

குவைத்தில் இந்திய பல் டாக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

Published On 2020-05-11 06:30 GMT   |   Update On 2020-05-11 06:30 GMT
குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான 2-வது டாக்டர் ஆவார்.
குவைத்:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 212 நாடுகளை தாக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் இந்த வைரசால் 8,688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் குவைத்தில் இந்திய பல் டாக்டர் பலியாகி உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு;

இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் வாசுதேவா ராவ் (54). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாசுதேவா ராவ் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பலியானார்.

குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான 2-வது டாக்டர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தை சேர்ந்த டாக்டர் தாரிக் உசேன் (62) என்பவரும் பலியாகி இருந்தார்.
Tags:    

Similar News